சென்னை: சென்னையில், காற்று வர வேண்டும் என்பதற்காக கதவை திறந்து வைத்து தூங்கியவரின் வீட்டில் 7 சவரன் நகை திருடு போயுள்ளது.

சென்னை அய்யப்பன்தாங்கல், அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனாரான அவர், நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார்.
காற்றில்லாமல் மிகவும் புழுக்கமாக இருந்ததால் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டில் அனைவரும் தூங்கி உள்ளனர். இந் நிலையில் இன்று காலை மணிகண்டன் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே வைத்திருந்த 7 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததை தெரிய வந்தது. இதுகுறித்து போரூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு நடத்தினர்.
[youtube-feed feed=1]