பனாஜி: கோவாவில் ஷிர்கான் கோயில் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  7 பேர் பலியான நிலையில்  50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இநத் சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கோவாவில் உள்ள  பிரசித்தி பெற்ற ஷிர்கான் கோயிலில் வருடாந்திர ஊர்வலத்திற்காக ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது.  அப்போது  திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்ததில், கூட்ட நெரிசல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50க்கும் மேற்பட்டோர். பலர் பலத்த காயமடைந்தனர்.

கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த  கோவா முதல்வர் பிரமோத் வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சென்று பார்த்தார். கூட்ட நெரிசலுக்கான காரணம் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவா  முதல்வர் இந்த சம்பவம் அதிகாலை 4 மணிக்கு நடந்ததாக கூறினார். இந்த திருவிழாவில்,  “50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்… ஊர்வலம் ஒரு சரிவை அடைந்தபோது,  கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.