நைஜீரியாவில் ராணுவ விமான விபத்து; 7 பேர் உயிரிழப்பு

Must read

அபுஜா:
நைஜீரியாவின் தலைநகர் அபுஜா அருகே சென்று கொண்டிருந்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் இபிகுன்லே தரமோலா தெரிவிக்கையில், “நைஜீரிய விமானப்படை (என்ஏஎஃப்) பீச்கிராஃப்ட் கிங் ஏர் பி 350 ஐ விமானத்தில் இயந்திர செயலிழப்பு ஏற்பட்டதால், அபுஜா விமான நிலையத்திற்கு திரும்பும் போது விபத்துக்குள்ளானது. என்றும் இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More articles

Latest article