கோவை: கோவை பேரூரில் உள்ள கோயில் குளத்தில் மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை வீசிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், குளத்தில் இருந்து அந்த சிலைகளை மீட்டனர். ஐம்பொன்னாலான 7 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பேரூரில் பிரபலமான கோவிலுக்கு சொந்தமான கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தினுள் சிலை கிடப்பதை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து உள்ள கோயில் குளத்தில் இன்று காலை ஐம்பொன் சிலைகள் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் பேரூர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கோவில் குளத்தினுள் கிடந்த சிலைகள் மீட்கப்பட்டன.
அதன்படி, விஷ்ணு, அம்மன், விநாயகர் உள்பட 7 ஐம்பொன் சிலைகள் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் சிலைகள் வட்டாட்சியர் அலுவகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில், சிலைகளை வீசி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.