Skip to content
  • Fri. Sep 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

புரெவி புயல்: உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

Dec 5, 2020

சென்னை: தமிழகத்தில் நிலவிய புரெவி புயல், மற்றும் கனமழை காரணமாக உயரிழந்த  7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வியாழக்கிழமை மாலை ஐந்தரை மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக நிலைகொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டியது.  இதன் காரணமாக பல இடங்களிலும் வீடுகள் இடிந்தும், 7 பேர் பலியாகினர்.   இந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு தமிழகஅரசு நிதிஉதவி அறிவித்து உள்ளது.

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
 தமிழகத்தில் புரெவி புயல், கனமழையால் இறந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். புரெவி புயலால் 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1, 725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும். புயல் மழைக்கு 37 பசு,  4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இறந்த ஒரு மாடுக்கு ரூ. 30,000 எருதுக்கு ரூ. 25, 000 கன்றுக்கு ரூ16,000 ஆடுக்கு ரூ. 3,000 நிவாரண நிதி வழங்கப்படும்  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

Post navigation

05/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்..
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள சென்னை உள்பட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்! முதலமைச்சர் அறிவிப்பு

Related Post

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

தமிழ் நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த TNHB, சென்னை மாநகராட்சி அனுமதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer