மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வியாழக்கிழமை மாலை ஐந்தரை மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக நிலைகொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டியது. இதன் காரணமாக பல இடங்களிலும் வீடுகள் இடிந்தும், 7 பேர் பலியாகினர். இந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு தமிழகஅரசு நிதிஉதவி அறிவித்து உள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் புரெவி புயல், கனமழையால் இறந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். புரெவி புயலால் 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1, 725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும். புயல் மழைக்கு 37 பசு, 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இறந்த ஒரு மாடுக்கு ரூ. 30,000 எருதுக்கு ரூ. 25, 000 கன்றுக்கு ரூ16,000 ஆடுக்கு ரூ. 3,000 நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.