சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5%உள்ஒதுக்கீடு வழங்கும் அரசின் மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் பன்வாரிலாலுடன் 5அமைச்சர்கள் சந்தித்தனர்.

மத்தியஅரசு நீட் தேர்வை கட்டாயப்படுத்தி வரும் நிலையில், தமிழகஅரசு,   அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழங்கி புதிய சட்டம் இயற்றியது. இந்த சட்டம், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், கவர்னர் பன்வாரிலால், அந்த மசோதாவுக்கு கையெழுத்திடாமல் தாமதப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக நடப்பாண்டில், இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக ஆளுநரின் செயலர் பதில் தர உத்தரவிட்டிருந்தனர். மேலும், ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி கண்கலங்கினார்.

இந்தநிலையில்,  7.5% இட ஒதுக்கீடு சட்டத்துக்கு  ஆளுநரின் முடிவு வெளிவரும் வரை தமிழக்ததில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாது என்றும் மாநில அரசு தெரிவித்தது. மேலும் ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் அரசு ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு இன்று திடீரென கிண்டி ராஜ்பவன் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்திததனர்.  அப்போது, மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகஅரசின் சட்ட மசோதாவுக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கக்கோரி  வலியுறுத்தப்பட்டதாகவும், மேலும் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது,  தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர்.