68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் பெறுகின்றனர்.

சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வானதுடன் மொத்தம் 5 விருதுகளை வாரிக் குவித்துள்ளது.

சூரரைப்போற்று :

சிறந்த நடிகர் : சூர்யா
சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி
சிறந்த பின்னணி இசை : ஜி.வி. பிரகாஷ்
சிறந்த திரைக்கதை : ஷாலினி உஷா நாயர், சுதா கொங்கரா

தவிர தமிழ் திரைப்படத்திற்கு மேலும் 5 விருதுகள் கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகை : லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி (படம் : சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த தமிழ் திரைப்படம் : சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத் (படம் : சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த திரைக்கதை : மடோன் அஷ்வின் (படம் : மண்டேலா)
சிறந்த அறிமுக இயக்குனர் : மடோன் அஷ்வின் (படம் : மண்டேலா)

தேசிய அளவில் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் உள்ளிட்ட மொத்தம் 10 விருதுகளை தமிழ் திரைப்படங்கள் வென்றுள்ளது.