சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்காக ரூ.127.57 கோடி ஒதுக்கி உள்ளது.

தமிழ்நாடு அரசு கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை வகுப்பறைகளுக்குக் கொண்டு வருவதால், பள்ளிகள் தனியார்ப்பள்ளிகளுக்கு இணையாக மேம்படுகின்றன.
அதன்படி, டிஜிட்டல் கருவிகள், ஊடாடும் பலகைகள், மல்டிமீடியா உள்ளடக்கம் மற்றும் ஆன்லைன் வளங்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் ஒரு புதுமையான வகுப்பறை ஆகும். இது கற்பித்தலை சுவாரஸ்யமாக்குகிறது மற்றும் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கிறது, அவர்களின் எதிர்கால திறன்களை வளர்க்க உதவுகிறது. இதற்காக ஊடாடும் ஒயிட்போர்டுகள், ப்ரொஜெக்டர்கள் மற்றும் கணினிகள் போன்ற நவீன டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வகுப்பறைகள் ரூ.127.57 கோடியில் அமைக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 2026-27க்குள் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 37,626 அரசு பள்ளிகளில் 30,774 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.