சென்னை:

னது 65வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவரும், தனது  தந்தையுமான கருணாதியிடம், மு.க. ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவரின் இல்லத்துக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த ஸ்டாலின் தனது மனைவி துர்கா சகிதம் இணைந்து கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

தனத பிறந்தநாளையொட்டி இன்று காலையிலேயே மெரினாவில் உள்ள அண்ணா சமாதி, வேப்பேரியில் உள்ள பெரியார் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின் திமுக தலைமை அலுவலகம் வந்தார்.

அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்ததை தொடர்ந்து திமுக தலைவர் குடியிருக்கும் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்தார்.

தொடர்ந்து தனது மனைவி துர்காவுடன் சென்று தனது தந்தை கருணாநிதி மற்றும் தாய் தயாளு அம்மாளின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கட்சி தொண்டர்கள் அவருக்கு மலர் மாலை, ரூபாய் மாலை, ஆடு போன்ற பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்தி வருகின்றனர்.

மேலும்,சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக தலைவர் வைகோ  மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன், திருமாவளவன், நடிகர் ரஜினி உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.