சென்னை: “65 வயதில் ஓய்வு என்பது மிகக் குறைவு” என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, அமெரிக்காவில், நீதிபதிகள் ‘சாகும்வரை பதவியில் இருப்பார்கள் என்று சுட்டிக்காட்ட  தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தியாவில் இறக்கும் வரை வாழ்நாள் முழுவதும் பதவி வகிப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அரசியல் சாசனம் அனுமதி வழங்கி உள்ளது. மற்ற அரசு ஊழியர் களுக்கு பதவிக்காலம் இத்தனை ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியின் பதவிக்காலம்  65 வயது வரையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் பதவிக்காலம் 65வயது வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மற்ற அரசு ஊழியர்களுக்கு ஒய்வுபெறும் வயது 58 ஆக இருக்கும் நிலையில், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் அதையும் 60 ஆண்டு காலமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், “உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகளின் உச்ச நீதிமன்றங்களின் ஒப்பீட்டு அணுகுமுறைகள்” என்ற மெய்நிகர் அமர்வில் தலைமை நீதிபதி என்வி ரமணா கலந்துகொண்டு உரையாற்றினார். அபோது, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது குறித்து விமர்சித்து உள்ளார்.
65வயதில் ஓய்வு என்பது மிக்குறைவு என கருத்து தெரிவித்துள்ளதுடன், அமெரிக்காவில் நீதிபதியாக இருப்பவர்கள் அந்நாட்டு அரசியல் சாசனப்படி உயிரோடு இருக்கும்வரை பதவியில் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், அவருடன் அமெரிக்க நீதிபதி ஸ்டீபன் பிரேயர் குழுவில் இடம்பெற்றார். அமர்வை ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையத்தின் டீன் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் வில்லியம் எம் டிரேனர்  உள்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
முதன்முறையாக, வெளிப்படையாக ஓரினச்சேர்க்கையாளரான ஒரு சட்ட வல்லுநர், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு அவரால் பரிந்துரைக்கப்பட்டதற்காக, தலைமை நீதிபதி ரமணாவை வில்லியம் எம் டிரேனர் பாராட்டினார்.

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது குறித்த கேள்விக்கு நீதிபதி ரமணா, “ஆமாம், ஒருவர் ஓய்வு பெறுவதற்கு 65 வயது என்பது மிகமிகக் குறைவான வயது என்று நான் நினைக்கிறேன். இந்திய நீதித்துறையில், பணியில் சேரும் போது நமது ஓய்வு தேதி தெரியும். விதிவிலக்குகள் இல்லை, என்னைப் பொறுத்தவரை, எனக்கு இன்னும் போதுமான ஆற்றல் உள்ளது, நான் ஒரு விவசாயியின் மகன், எனக்கு இன்னும் விவசாயம் செய்ய இன்னும் கொஞ்சம் நிலம் உள்ளது, அடிப்படையில் நான் ஒரு மக்கள் மனிதன். நான் இருக்க விரும்புகிறேன். மக்கள் மத்தியில் இது எனது மாணவர் காலத்திலிருந்தே உள்ள இயல்பு.மக்களுக்காக எனது ஆற்றலை முதலீடு செய்ய சரியான வழியை நான் கண்டுபிடிப்பேன் என்று நம்புகிறேன்.

நிச்சயமாக ஒன்று சொல்ல முடியும், நீதித்துறையில் இருந்து ஓய்வு பெறுவது என்பது நான் அல்ல. பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவேன். எனது ஓய்வுக்குப் பிந்தைய திட்டத்தைப் பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு தற்போது நான் மிகவும் பிஸியாக உள்ளேன். இந்திய உச்சநீதிமன்றத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நான்கு பெண் நீதிபதிகள் உள்ளனர். இதுவே அதிகபட்ச எண்ணிக்கை. இது போதாது என்று எனக்குத் தெரியும். இன்னும்  அதிகமாக எதிர்பார்க்கிறேன். சமீபத்திய நியமனங்கள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கம் பற்றிய விவாதங்களை உருவாக்கியுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகப் பெண்களே ஒன்றுபடுங்கள். உங்கள் சங்கிலிகளைத் தவிர உங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்று கார்ல் மார்க்ஸிடம் கடன் வாங்கினேன். மக்கள், பன்முகத்தன்மையை வரவேற்றனர், என்னைப் பொறுத்தவரை, அதிகமான பெண் நீதிபதிகள் இருப்பதோடு, உள்ளடக்கம் என்பது நின்றுவிடவில்லை. நமது மக்கள்தொகை கிட்டத்தட்ட 140 கோடி. சமூக மற்றும் புவியியல் பன்முகத்தன்மை நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் அதன் பிரதிபலிப்பைக் காண வேண்டும். சாத்தியமான பரந்த பிரதிநிதித்துவத்துடன், மக்கள் பெற வேண்டும். இது அவர்களின் சொந்த நீதித்துறை என்று நினைக்கிறார்கள். பெஞ்சில் உள்ள பன்முகத்தன்மை கருத்துகளின் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது. பன்முகத்தன்மை செயல்திறனை மேம்படுத்துகிறது. வெவ்வேறு பின்னணியில் உள்ளவர்கள் தங்கள் மாறுபட்ட அனுபவங்களால் பெஞ்சை வளப்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவின் வயது 65. இவர் ஆகஸ்டு மாதம் 26ந்தேதியுடன் பணியில் இருந்து ஒய்வு பெற உள்ளார். இந்த நிலையில், 65வயது ஓய்வு வயது குறைவு, அமெரிக்காவைப்போல நீதிபதிகள் ஆயுள்முழுவதும் பணியில் இருக்க வேண்டும் என்று எனது ஆசையை  பதிவு செய்துள்ளார்.

நாட்டில் கோடிக்கணக்கான இளைய சமுதாயம், இயந்திரங்கள் மற்றும் கணினியின் வளர்ச்சி காரணமாக, சரியான வேலைவாய்ப்பின்றி அல்லல் படும் நிலையில், நீதிபதிக்கோ, சாகும்வரை சொகுசாகவும், அரசு மரியாதையுடன் வாழ வேண்டும் என்று ஆசை மேலோங்கி உள்ளது.
ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அதிகரிக்க, இளைய சமுதாயத்தினரின் பணி வாய்ப்பு பறிபோகுமே, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகுமே, அரசு பணி என்ற அவர்களின் கனவு பொய்த்துவிடுமே என்பது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் தமிழகஅரசு போல சில மாநில அரசுகள் செயல்படுவது  மாதிரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தனது ஆசையை வெளிப்படுத்தி இருப்பது, அவருடைய பதவியை ஆசையைத்தான் பிரதிபலித்துள்ளது.
[youtube-feed feed=1]