ஜகார்த்தா:
டந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை  இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து,  இந்தோனேசிய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை  இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்தவர்களில், 347 பேர் பொது மருத்துவர்கள் என்றும், 284 பேர் மருத்துவத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும், 9 பேர் இந்தோனேசியக் குடியுரிமை பெற்ற மருத்துவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கொரோனா பாதிப்பால் இறந்த மொத்த மருத்துவர்களில் ஆண் 535 பேரும், பெண்கள் 105 பேரும் அடங்குவர். இது ஆண் மருத்துவர்களின் உயிரிழப்பு 83.6 சதவிகிதமாகவும்,  பெண்கள் 16.4 சதவிகிதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.  மொத்தமாக 199 மருத்துவமனைகள்,  அதிக தொற்று டெல்டா மாறுபாடு தோன்றியதால் உயிரிழப்புகள்  அதிகரிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டின் ஜனவரி  மாதத்தில் 65 பேரும், 2020-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 59 பேரும், 2021-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 52 பேரும் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மருத்துவர் உயிரிழப்புகளைக்  கொண்ட மாகாணமாகக்  கிழக்கு ஜாவா இருந்து வருகிறது. இந்த மாகாணத்தில், 140 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து,  மத்திய ஜாவா மாகாணத்தில் 96 பேரும்,  ஜகார்த்தாவில்  94 பேரும்,  மேற்கு ஜாவாவில் 94 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியா இதுவரை 3,082,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த எண்ணிக்கையில்,   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையான  80,598 பேரும் அடங்கும்.