புதுடெல்லி: 
ந்தியாவுக்கான கொரோனா பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக இங்கிலாந்து  அறிவித்துள்ளது. கொரோனா பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்படுகிறது.   இதன் மூலம்,  இந்தியா,  சிவப்பு  இருந்து  அம்பர் நிற பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது.  அறிவிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் வரும் 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து ஹை கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கான விசிட் விசாகள் தற்போது மீண்டும் வழங்கப்படுகிறது. இதே போன்று நீண்டாக கால விசாவும் வழங்கப்படுகிறது. 
மேலும் அந்த செய்திக் குறிப்பில்,  இங்கிலாந்திற்கு வரும் பயணிகள் வீட்டிலோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலோ 10 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.
தன்னார்வ டெஸ்ட் டு வெளியீடு திட்டத்தின் கீழ், இந்தியாவிலிருந்து வரும் பார்வையாளர்கள் தனிமைப்படுத்தலின் 5-வது நாளில், பணம் செலுத்தி  கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்புவதைத்   தேர்வு செய்யலாம். இந்த பரிசோதனையின்  முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள், தனிமைப்படுத்துதலிலிருந்து வெளியே வரலாம்.
“ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக்கிழமை,  அதிகாலை 4 மணியிலிருந்து  இந்தியா சிவப்பிலிருந்து அம்பர் பட்டியலுக்கு மாறுகிறது  என்றும் இந்தியாவைத் தவிர, பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் அம்பர் பட்டியலுக்கு மாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பர் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாறும் நாடுகளின் பட்டியலில்  ஆஸ்திரியா, ஜெர்மனி, லாட்வியா, நோர்வே, ருமேனியாஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.