புதுடெல்லி:
ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாமல் 610 சிறிய மற்றும் மாநில கட்சிகள் பூஜ்யம் வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 601 சிறிய மற்றும் மாநில கட்சிகள், ஓர் இடத்தைக்கூட பெறவில்லை.
இதில் 13 கட்சிகள் ஓர் இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன.
பார்வர்டு பிளாக், இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி, சிக்கிம் ஜனநாயக கட்சி, அனைந்திந்தி என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
610 கட்சிகளில் 80 கட்சிகள் மட்டுமே தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளன. இதில் 37 கட்சிகள் தங்கள் இருப்பை பதிவு செய்துள்ளன.
பாஜக 303 இடங்கள், காங்கிரஸ் 52 இடங்கள், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன.
ஆம் ஆத்மி, அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் ஐக்கிய கட்சி, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.