டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் புதிதாக 60,963 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிக்கப்பட்டு வருவதில் இந்தியா முதலிடத்திலும் உள்ளது.
நாடு முழுவதும் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 60,963-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 23,29,639 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் நேற்று ஒரே நாளில் 834 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். இ
துவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46,091 ஆக உள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புடன் 6,43,948 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 16,39,600- பேர் இதுவரை மீண்டுள்ளனர்.
இதுவரை 2,60,15,297- சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
நேற்று ஒருநாளில் மட்டும் 7,33,449- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.