தெலுங்கில் இன்னமும் ’’சூப்பர் ஸ்டாராக’’ திகழ்பவர், சிரஞ்சீவி. அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டாவிட்டாலும், தெலுங்கு சினிமா தேசத்தில் அவரது மவுசு மங்கவில்லை.

முழு நேர அரசியலுக்கு ’’குட்பை’’ சொல்லி விட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்த ‘கைதி எண் 150’ திரைப்படம் நல்ல வசூல் பார்த்தது.

“இனிமேல் ஆண்டுக்கு ஒரு படம் தருவேன்” என அப்போது அவர் உறுதிமொழி அளித்தார். ஆனால் அது நடக்கவில்லை.

அஜீத் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் இப்போது சிரஞ்சீவி நடித்து வருகிறார்.

‘பில்லா’, ‘சக்தி’ போன்ற படங்களை கொடுத்த மெஹர் ரமேஷ் இயக்கும் இந்த படத்தை அனில் சுங்கரா தயாரிக்கிறார்.

தெலுங்கு ‘வேதாளம்’ படத்தில் நடிக்க அவர், சிரஞ்சீவிக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் அளித்துள்ளார்.

“இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. படம் ரிலீசானால் தியேட்டரில் பணமழை கொட்டுமே” என்கிறார், அனில்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]