எர்ணாகுளம்: இஸ்லாமிய கல்விச்சாலையான மதரஸாவுக்கு படிக்க வந்த 6வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த மதரஸா ஆசிரியர் அப்துல் ஹக்கிம் என்பவருக்கு கேரள மாநில போக்சோ நீதிமன்றம் 67வருடம் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக நாடு முழுவதும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,  இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்களான மதராசா (Madrasa) எனும்  கல்விச் சாலையின் மீதும் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. அங்கு  படித்து வரும் மாணாக்கர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், மரஸாக்களில் இளஞ்சிறார்களிடம் மூளைச்சலவை நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள  மதரஸாவில் படிக்க 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு  அப்துல் ஹக்கீமை போலீசார் கைது செய்தனர். 30 வயதான அப்துல் ஹக்கீம்,  ‘மத்ரஸா’ என்ற இஸ்லாமிய மத போதனைகளை போதிக்கும் பள்ளியில் பணிபுரிகிறார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பியை  பகுதியைச் சேர்ந்தவர். இவர்மீதான வழக்கில் காவல்துறையினர்  பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, குற்றவாளிக்கு 62 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார்  உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகள் கடத்தலா? மாதவரத்தில் உள்ள ‘அரபி மதரஸா பள்ளி’யில் பீகாரை சேர்ந்த 12 குழந்தைகள் ரத்தக் காயங்களுடன் மீட்பு…