
கொழும்பு: தொழில்முறை கிரிக்கெட் ஒன்றில், 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் திசாரா பெரேரா.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியொன்றில், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் அவர்.
ஸ்ரீலங்கா ஆர்மி அணியின் சார்பாக விளையாடிய அவர், ப்ளூம்பீல்டு கிரிக்கெட் அன்ட் அத்லெடிக் கிளப் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியொன்றில், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். அவர், 13 பந்துகளில் 52 ரன்களை அடித்து நாட்அவுட்டாக இருந்தார்.
இந்தப் போட்டியில், இவர் மொத்தம் 8 சிக்ஸர்களை அடித்தார். இது, இலங்கை வீரர்கள் அளவில், லிஸ்ட் ஏ போட்டிகளில் அடிக்கப்பட்ட இரண்டாவது வேகமான அரைசதமாகும். இதற்கு முன்னர், இத்தகையதொரு போட்டியில், இலங்கையின் கெளஷல்யா வீரரத்னே 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக உள்ளது.
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்கள் வரிசையில், உலகளவில் 9வது வீரராக இணைந்துள்ளார் பெரேரா என்பதும் குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]