சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியானர்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அருகே, கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. அதற்கான கழிவுநீர் ஊர்தி வரவழைக்கப்பட்டு கழிவுநீரை எடுத்துச் சென்றது. அதைத்தொடர்ந்து, லாரி முழுவதுமாக கழிவுகளை எடுத்துச் சென்று விட்டதா என்பதை வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கழிவுநீர் தொட்டியை எட்டி பார்த்தபோது, அதனுள் இருந்து வெளியாகி வந்த விஷவாயுவால் தாக்கப்பட்டு கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததார்.
இதையறிந்த அவரது 2 மகன்களும் தந்தையை காப்பாற்ற முயற்சித்தபோது, அவர்களும் விஷ வாயுவால் தாக்கப்பட்டு தொட்டிக்குள் விழுந்தனர். இதையறிந்த அககம் பக்கத்தினர் சிலர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட அவர்களும் விஷவாயுவால் தாக்கப்பட்டு கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தனர்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கும், தீயணைப்பு துறையின ருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மீ்ட்பு படை யினர், பாதுகாப்பு கவசங்களோடு விஷ வாயு தாக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
ஆனால், அவர்கள் 6 பேரும் விஷ வாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.