சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்!

டில்லி,

சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில, 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 48 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதன் காரணமாக சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகள் ஒதுக்க வழக்கறிஞர்களும், அரசும் கோரி வந்த நிலையில், தற்போது 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் காரணமாக, புதிய நீதிபதிளாக அப்துல் குத்தூசி, ஆதிகேசவலு, சுவாமிநாதன், தண்டபானி, பவானி சுப்பராயன், ஜெகதீஷ் சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், அதைத்தொடர்ந்து புதிய நீதிபதிகள் பதவி ஏற்பார்கள் என்றும் தெரிகிறது.

புதிய நீதிபதிகளை சேர்த்து சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது. ஆனால், மேலும் 21 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
6 new judges appointed to the Chennai High Court, President Pranab muharje approval