மதுரை: முறைகேடுகளில் ஈடுபட்ட 6 வழக்கறிஞர்கள், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் பணியில் தொடர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

பல வழக்கறிஞர்கள்,  கட்டப்பஞ்சாயத்து, அதிக வட்டி வசூலிப்பு, கொலை வழக்கு என முறைகேடாக செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால், அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதிப்பது வழக்கமான நடைமுறை. இதுபோல முறைகேட்டில் ஈடுபட்ட 6 வழக்கறிஞர்களை பார் கவுன்சில் தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான 6 வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து அவர்கள், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிமன்றம்,  தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் 6 வழக்கறிஞர்களை பணியில் தொடர தடை விதித்ததை உறுதி செய்தது. இவர்களில், 5 வழக்கறிஞர்களை 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை பணி செய்ய தடை விதித்ததுடன், கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்குமாரை நிரந்தரமாக பணியில் சேர தடை விதித்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.