சென்னை: தமிழக முதல்வர் அறிவித்தபடி கொரோனா வார் ரூம் கண்காணிப்பு பணிக்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட கொரோனா கட்டளை மையம் (war room) ஏற்படுத்தப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மையம்’ (War Room – வார் ரூம்) அமைக்கப்பட்டு, அதை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு, தேவை ஆகியவற்றை அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அமைக்கப்பட்ட கட்டளை மையத்திற்கு 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகுமீனா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.