சென்னை
நேற்று தமிழக அரசு இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி ஊரடங்கு அமலாக்கப்பட்ட பிறகும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. இதையொட்டி ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டும் எவ்வித மாற்றமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.,
அதன் அடிப்படையில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதியுடன் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே வண்டிகள் மூலம் காய்கறி, பழங்கள் எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் நேற்று மக்களுக்கு வசதியாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
அத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக சுமார் 4000க்கும் மேற்பட்ட பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டன. இந்த சிறப்புப் பேருந்துகள் மூலம் நேற்று வரை சுமார் 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 65,746 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
இந்த தகவலை தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.