மணிலா: பிலிப்பைன்சில் இன்று ஏற்பட்ட அதிதீவிர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

தெற்கு பிலிப்பைன்சில் உள்ள டாவோ டெல் சுர் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக  ரிக்டர் அளவில் என பதிவானது. 15 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்க பீதி அடைந்த பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிர்ச்சேதங்களோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. மிண்டானோ மாகாணத்தில் உள்ள கடாபாவன், கொரோநாடல், தெற்கு கோட்டோபேடோ ஆகிய நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.