டில்லி:
2020ம் ஆண்டில் மொபைல் சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கும் என இந்தியத் தொலைத் தொடர்பு துறை ஏற்கனவே தெரிவிந்திருந்த நிலையில்,5 ஜி, ஒவ்வொருவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் என மத்திய தொலைதொடர்புத்துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் கூறி உள்ளார்.
இந்தியாவில் 5ஜி தொழில் நுட்பத்தைக் கொண்டுவரும் முயற் சியில் இந்தியத் தொலைத் தொடர்பு துறையும், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
டிராய் கடந்த ஆண்டு டிசம்பரில்று 5ஜி சேவைக்குத் தேவையான அலைக்கற்றைகள் உட்பட 8644 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை களை ஏலம் விடுவதற்குப் பரிந்துரை செய்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 4.9 லட்சம் கோடி என தேசிய டிஜிட்டல் கம்யூனி கேஷன்ஸ் பாலிசி நடை முறைப் படுத்தல் குறித்த பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட தொலைத்தொடர்பு துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் கூறியிருந்தார்.
அப்போது, 5ஜி தொழில்நுட்பத்துக்குத் தேவை யான கட்டமைப்புகளை உருவாக்கு வதில் கமிட்டி ஈடுபட்டு வருவதாகவும், வரும் 2019 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 5ஜி தொழில்நுட்பத்துக்கான கட்டமைப்புத் தயாராக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
2020-ம் ஆண்டின் பாதியில் 5ஜி தொழில்நுட்பம் தயார் நிலையில் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என்றவர், அதைத்தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பம் நாடு முழுவதும் படிப்படியாக வழங்கப்படும் இது இந்தியப் பொருளாதாரத்தில் ரூ. 70 லட்சம் கோடி அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய தொலைத்தொடர்பு துறை செயலர் அருணா சுந்தர்ராஜன், இந்த ஆண்டின் மத்தியில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சுமார் 4.9 லட்சம் கோடி மதிப்பில் 8 ஆயிரத்து 644 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிதி நெருக்கடியில் உள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுவதால், அலைக்கற்றை ஏலத்தொகையை குறைக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.