சென்னை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணியில் 5நாள் 24மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருத்தணி முருகன் கோயிலில் வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை பெருவிழா நடைபெற உள்ளது. 21ம் தேதி அஸ்வினி விழா, 22ம் தேதி பரணி விழா, 23ம் ஆடி கிருத்திகை விழா மற்றும் முதல் தெப்பல் விழா, 24ம் தேதி இரண்டாம் தெப்பல் விழா, 25ம் தேதி மூன்றாவது தெப்பல் விழா ஆகியவை நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.
2ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டி அடிக்கிருதிகை வெகுசிறப்பாக நடைபெற உள்ளதால், லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிவறை, தங்கும் வசதி ஆகியவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருத்தணிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால் சுகாதார துறை சார்பில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றுட், அதே நேரத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணியில் 21ந்தேதி முதல் 25ந்தேதி வரை 24மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.