சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இன்று உச்சபட்சமாக இதுவரை இல்லாத அளவில் 5849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  186492 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 1171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இன்று மட்டும் 4910 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இன்று ஒரே நாளில் 74 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 74 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1,31,583 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் 113 (58 அரசு + 55 தனியார்) உள்ளன..
இன்று மட்டும் 58,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது
இன்று புதிதாக 5,849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,643 ல் இருந்து 1,86,492  ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 சேர்க்கப்பட்டுள்ளது.. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் இன்று 4,910 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,670  ல் இருந்து 1,31,583 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 70.56 % பேர் குணமடைந்து உள்ளனர்.
இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில்,  தமிழகத்தில் 51,765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.