டெல்லி:  நாடு முழுவதும் 541 மருத்துவக் கல்லூரிகளில் 80,312 இடங்கள் இருப்பதாக மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடந்து முடிந்தன. இந் நிலையில், நாடு முழுவதும் 541 மருத்துவ கல்லூரிகளில் (280 அரசு கல்லூரிகள், 261 கல்லூரிகள்) உள்ளதாகவும், அந்த கல்லூரிகளில் 80312 மருத்துவ இடங்கள் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநிலம்வாரியாக, எத்தனை இடங்கள் உள்ளன என்றும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கர்நாடகாவில் 60 கல்லூரிகள் உள்ளன, அதற்கு மகாராஷ்டிராவில் 56 கல்லூரிகளும், உத்தரப்பிரதேசத்தில் 55 மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன.

தமிழகத்தில் 50 கல்லூரிகளும், தெலுங்கானவில் 33 கல்லூரிகளும் உள்ளன. ஆந்திரா, கேரளாவில் தலா 31 கல்லூரிகளும், குஜராத்தில் 29 கல்லூரிகளும் இருக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகளில் 45 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. அதாவது, 2014ம் ஆண்டு 381 கல்லூரிகள் தான் இருந்தன. ஆனால் இப்போது 541 கல்லூரிகளாக அதிகரித்துள்ளது. புதியதாக 157 கல்லூரிகள் உருவாகி உள்ளன.