சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது அண்ணா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் இனறு பேரறிஞர் அண்ணாவின் 53-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் ஆங்காங்கே உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் பொன்னையன், ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, கே.எஸ்.விஜயகுமார், மாநில மாணவரணி துணை செயலாளர் ஆ.பழனி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
[youtube-feed feed=1]