சென்னை:
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள்  உள்பட 51 காவல்துறை அதிகாரிகள் திடீர் பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பணிபுரிந்து வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 51 காவல்துறை அதிகாரிகளை பதவிஉயர்வு அளித்து, பணியிடை மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது.
அதில், கொரோனா தடுப்பு பணிகளில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஈடுபட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி எஸ்.பியாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தீபா சத்யன் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பகலவன்- கரூர் மாவட்ட எஸ்பியாகவும்,
பாண்டியராஜன்- வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும்,
ஸ்டீபன் ஜேசுபாதம்- சிறப்பு பிரிவு எஸ்பியாகவும்,
சிபி சக்ரவர்த்தி- சென்னை காவல்துறை நிர்வாக பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காளிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

தஞ்சை எஸ்.பி. மகேஷ்வரன் கடல் அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ஆக மாற்றம்

 திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ஆக மணிவண்ணன் நியமனம்