தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து சோதனை நடத்தினர்.
கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் மாநிலம் முழுவதும் 51 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவு போலி மருத்துவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது அங்கு மட்டும் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய அண்டை மாநிலங்களை ஒட்டிய திருவள்ளூர் மற்றும் தேனி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் மருத்துவர்கள் விதிகளுக்கு புறம்பாக மருத்துவ பணியில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்ற போலி மருத்துவர்களை கண்டறியும் பணியில் மருத்துவத் துறை தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.