சென்னை

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் 51 திமுகவினர் நீக்கப்பட்டுள்ளார்.

வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.   திமுக அம்ற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் காணொலி மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றார். 

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“வரும் 19 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் 51 திமுகவினர் கட்சியில் இருந்து இடை  நீக்கம் செய்யப்படுகின்றனர்.  கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.