சென்னை; வங்கதேச விடுதலைப்போரின் 50 ஆம் ஆண்டு பொன்விழா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான  சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் விழா நடைபெற்றது.

வங்கதேச விடுதலைப்போரின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் சார்பாக இன்று காலை 10.30 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் கே.எஸ்.அழகிரிசிறப்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் கேப்டன் பிரவீன் தாவர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சிவ.ராஜசேகரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் எஸ்.எம்.இதாயத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சுபேதார் கோ.ராஜசேகரன் நன்றியுரை நிகழ்த்தினார்