500கிலோ எகிப்து குண்டு பெண், சிகிச்சை காரணமாக 400 கிலோவாக குறைந்தார்!

Must read

மும்பை,

கிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண்  இமான் அகமது. இவர் தைராய்டு பிரச்சினை காரணமாக குண்டு பெண்ணாக மாறினார். அவரது எடை 500 கிலோவாக கூடியது.

உடல் எடை அதிகரிப்பால் அவர் எழுந்து நடக்க முடியாமலும், தனது அன்றாட கடமைகளை செய்ய முடியாமலும் படுத்த படுக்கையாக கிடந்தார்.

அவரது சகோதரி சாய்மா ஆன்லைனில் இமான் அகமதுவின் உடல் எடை பிரச்சினை பற்றி தெரிவித்து உதவி கேட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த  பிப்ரவரி மாதம் 11-ந் தேதி மும்பைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டு மும்பையில் உள்ள  சைபீ  என்ற தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு கடந்த மாதம் முதல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக அவரது உடல்எடை 100 கிலோ குறைந்து உள்ளது.

தொடர்ந்து 3 வாரம் எடுக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக அவரது எடை 100 கிலோ குறைந்த தால், அவர் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தார்.

இதுகுறித்து சைபீ மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது,

இமான் அகமது , தனி விமானம் மூலம் ஜனவரி மாதம் இந்தியா வருவதற்கும் முன்வரை, 25 வருடங்களாக வெளியே எங்கும் செல்லவில்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்  பிறக்கும் போது ஐந்து கிலோவாக இருந்ததாகவும், அவர் எலிபாண்டியாசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டதாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முஃபசல் லக்டவாலாவின் தலைமையில், மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டது.

அதைத்தொடர்ந்து எடை குறைப்பு  (பாரியாட்ரிக்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சையும், லேப்ராஸ் கோபிக் அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டது. உணவு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து உடல் எடை 3 வாரத்தில் 100 கிலோ குறைந்தது. சிறுநீரகம் உள்ளிட்ட அவரது உடல் உறுப்புகள் சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இன்னும் 3 மாதம் சிகிச்சை பெற்றால், மேலும் 100 கிலோ எடையை குறைத்துவிடலாம் என்றும், எகிப்திற்கு விமானத்தில் திரும்ப செல்லக்கூடிய அளவிற்கு உடல் தகுதியை பெற வைக்க முயற்சித்து வருகிறோம்” என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவருக்கு 13 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

உடல் எடை குறைந்ததன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அவரால் படுக்கை யில் இருந்தவாரே எழுந்து உட்கார முடிகிறது. விரைவில் அவர் எழுந்து நடப்பார் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

More articles

Latest article