டில்லி,
த்திய அரசின் அதிரடி அறிவிப்பான ரூ.500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கு வரும் 15ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான வழக்கு வரும் 15ம் தேதி  உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
sc-moneycourt
கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்க கடந்த 8ந்தேதி (செவ்வாய்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.இதைதொடர்ந்து கையில் வைத்திருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ள டிசம்பர் 30–ந் தேதி வரை கால அவகாசம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிகொள்ள லாம்.
இதனிடையே, மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சங்கம்லால் பாண்டே, விவேக் நாராயண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனு வரும் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், இந்த மனுவை எதிர்த்து  கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை  கருத்தை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட்டு கிளை – தள்ளுபடி
மதுரை ஐகோர்ட்டு கிளையில்,  இந்திய தேசிய லீக் செயலாளர் சீனி முகமது மத்திய அரசின் உத்தரவுக்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அதில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின்  உத்தரவிற்கு தடை விதிக்க கோரியிருந்தார்.
இந்த மனுவை  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.