கோவா:  சிறையில் இருந்து 50  கைதிகள் தப்பி ஓட்டம்?

Must read

கோவா:

கோவாவின் சதா துணை சிறைச்சாலையில் சுமார் 45 கைதிகள் தப்ப ஓடிவிட்டதாக  அதிர்ச்சி தகவல் பரவியது. இதை  அம்மாநில சிறைத்துறை மறுத்துள்ளது.

கோவாவின் சதா துணை சிறைச்சாலையில் பரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இநந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி  ஜெயிலரை தாக்கிவிட்டு, கலவரத்தை தூண்டிவிட்டு 50க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்துவிட்டதாக தகவல் பரவியது.

“சதா சிறையில் பராமரிப்பு பணிகள் நடப்பதும், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சிறைக்கைதிகள் ஜெயிலரை தாக்கியதும் தப்பிக்க முயற்சித்ததும் உண்மைதான். ஆனால் அவர்கள் தப்பிக்க எடுத்து முயற்சியை சிறைக் காவலர்கள் தடுத்துவிட்டனர்” என்று அம்மாநில சிறைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article