சென்னை:

டைபெற இருக்கும்  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரி யான கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆர்.கே.நகர் தொகுதியில் 50  வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும்,  பாதுகாப்பு பணிக்காக 2 கூடுதல் துணை ராணுவப்படை வர உள்ளதாகவும், 1,694 காவ லர்கள் ஆர்.கே.நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா கூறியுள்ளார்.

தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறும்போது,  வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்றோ அல்லது நாளையோ  தொடங்கும் என்றும், வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் ஆர்.கே.நகரில் வாக்களிக்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும்,  தேர்தல் தொடர்பாக வந்த 145 புகார்களில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒரு ஷிப்டிற்கு 10 பறக்கும் படை வீதம் 100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும், மேலும் இரண்டு தேர்தல் பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறினார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் மொத்தம் 256 வாக்குச்சாவடிகள் அமைக்கபடும். இதில் 50 வாக்குச்சாவடி மட்டுமே பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய நிலையில், சுமார் 75 சதவகித வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அரசியல் விமர்சிகர்கள் கூறி வருகின்றனர்.