சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருவதால், அரசு ஊழியர்கள் நாளை முதல் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை வரும் 20ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 6ந்தேதி முதல் 20ம் தேதி வரை மேலும சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் பணி தொடர்பாக தமிழக அரசுஅரசாணை வெளியிட்டு உள்ளது. அதில்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50% பேர் அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும்.
மேலும் குரூப் ஏ பிரிவு அரசு அதிகாரிகள் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும்.
மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்று திறனாளி அரசு பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நாளை முதல் 20ம் தேதி வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.