புதுச்சேரி: புதுச்சேரியில் வரை 50% அரசு ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில் ஜனவரி 31ந்தேதி வரை கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகள் மூட உத்தரவிடப்பட்டும், அரசு தனியார் நிறுவனங்களில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஜனவரி 31ம் தேதி வரை 50 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அரசு உத்தரவிட்டுள்ளது.  கொரோனா காரணமாக பி மற்றும் சி பிரிவு ஊழியர்களில் 50 சதவீத பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவிடப்பட்டிருக்கிறது. அரசு செயலர்கள், அரசுத்துறை செயலர்கள் முழுமையாக பணிக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் என்றும்  புதுச்சேரி அரசு தெரிவித்திருக்கிறது.

அதுபோல கல்வித்துறை மாநில கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், வரும் 19 ஆம் தேதி 10,12- ஆம் வகுப்புகளுக்கு தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும்; மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.