டெல்லி: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தேதி மாற்றம் செய்து அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப். 14ந்தேதிக்கு பதிலாக பிப்.20- ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரையில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. உபி.யில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையில் பஞ்சாப்பில் பிப்ரவரி 16ம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தேர்தல் தேதியை மாற்றி வைக்குமாறு அம்மாநில முதல்வர்,  சரண்ஜித் சிங் சன்னியும் (காங்கிரஸ்) தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து,  பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும்  தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தார். மேலம்,  பாஜ.வும் அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் (சம்யுக்த் பிரிவு)  இதே கோரிக்கை வலியுறுத்தின.

இதையடுத்து,  பிப்ரவரி 14ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் நடைபெற உள்ள  குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மாநில மக்கள் பங்கேற்க எதுவாக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பஞ்சாப் மாநில அனைத்துக்கட்சிகள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.