சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மே 17ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன்பிறகு தமிழகத்தில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அந்த பேருந்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருகிறது. தமிழகத்தில் நேற்றை நிலவரப்படி ரேநாளில் புதிதாக 771பேர் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4829 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதனால் தற்போது பல பகுதிகளில் மீண்டும் மக்கள் கூட்டம் கூடி வருகிறது. இந்த நிலையில்,  மே 17ஆம் தேதிக்கு பிறகு 50 சதவிகிதம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அனைத்து பணி மனைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை  இயக்க  உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாஸ்க்,  சனிடைசர், கையுறை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும், மாஸ்க் இல்லாத பயணிகளை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும்,  இருக்கைகளில் அமர்ந்து இருப்பவர்களை தவிர்த்து பேருந்தில் நிற்பவர்கள் சுமார்  6 அடி இடைவெளி விட்டு நிற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறையின் அறிவிப்பு நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டுப் பாடுகள் சாத்தியப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழகத்தில் மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கம் இல்லாததால், பெரும்பாலான பேருந்துகளில் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும்… அதுவும் பள்ளிகள் வேலை நாட்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டிக் கட்டில் தொங்கிக்கொண்டே பயணம் செய்யும் சூழல் உள்ளது. உண்மை இவ்வாறு இருக்க,
தற்போது 50 சதவிகிதம் என குறைந்த அளவே பேருந்து இயக்கப்படும்போது, அதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட முடியுமா? அது சாத்தியமாகுமா? என்று சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பொதுமக்கள் எப்படி சமூக இடைவெளியை கடைபிடிப்பார்களா? நல்லாத்தான் யோசிக்கிறாய்ங்கப்பா…