சென்னை,

டந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி டிசம்பர் 31 அன்று அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது. அரசியல் கட்சியினரும், திரையுலகை சேர்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நாம் தமிழர் போன்ற ஒருசில கட்சியினர் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது அரசியல் அறிவிப்புக்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த 1ந்தேதி (புத்தாண்டு) அன்று புதிய மொபைல் செயலி (ஆப்) மற்றும் தனி இணையதளத்தையும் தொடங்கினார்.

 இந்த இணையதளம்  மற்றும் மொபைல் செயலி மூலம் மாற்றத்தை விரும்புவர்கள் பதிவு செய்யலாம் என்றும் கோரியிருந்தார்.

இந்நிலையில் ஒரே நாளில் 50 லட்சம் பேர் இணைய தளம் மூலமாகவும், மொபைல் ஆப் மூலமாகவும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக பிரபல ஆங்கில  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை பின்பற்றி பிரபல மாலை நாளிதழ் ஒன்றும் இதுகுறித்து முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டும், போஸ்டரில் பிரசுரித்தும் , ரஜினிக்கு மக்களின் அமோக ஆதரவு இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தது.

ஒரே நாளில் ரஜினிக்கு 50 லட்சம் பேர் ஆதரவா? என்பது குறித்து சர்ச்சைகளும் எழுந்தது.

வலைதள தொழில்நுட்ப வல்லுனர்கள் இது சாத்தியமில்லை என்றும், இதில் ஏதோ தவறு நடந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில், முதலில் செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகமே தற்போது, இதுகுறித்து விசாரித்து உண்மையான தகவலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, ரஜினிக்கு ஆதரவாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்திருப்பதாக தெரிவித்து உள்ளது.

ரஜினிக்கு ஒரே நாளில் 50 லட்சம் பேர் ஆதரவு என்ற  தகவல் தமிழக  அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இந்நிலையில் தற்போது 50 ஆயிரம் பேரே ஆதரவு என்று செய்தி வெளியாகி இருப்பது அவர்களுக்கு ஆறுதலை தந்துள்ளதாக கூறப்படுகிறது.