பலராம்பூர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹெல்வா வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ரித்தேஷ் (வயது 5). சிறுவன் தனது தாத்தாவுடன் காட்டிற்குள் சென்றான். அப்போது புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி ரித்தேஷை கவ்வி இழுத்துச் சென்றது.
அந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. அதன் பின்னர் சிறுவனைத் தேடியபோது சிறிது தூரத்தில் சிறுவனின் உடல் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டனர்.
காவல்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனைத் தாக்கிய ‘சிறுத்தையை பிடிக்கக் கூண்டுகள் வைக்கப்படுட்டுள்ள்ன.
அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சிங் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]