சென்னை:
தமிழகத்தின் தலைநக்ர் சென்னையில் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்த 5 பெண்கள் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 227 பெண்கள் விடுதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் புற்றீசல் போல பெருகி வந்த பெண்கள் விடுதிகள் காரணமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், பெண்கள் விடுதிகள் அரசு அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை பல முறை தமிழக அரசு நீட்டித்து வந்தது.
இந்த நிலையில், இன்னும் 227 பெண்கள் விடுதிகள் பதிவு செய்யப்படாமல் நடைபெற்று வருவதாகவும், அந்த விடுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பான ஆய்வில், அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்காமல் 227 விடுதிகள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 227 விடுதிகளுக்கும் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தண்ணீர் மற்றும் மின்சார விநியோகத்தை நிறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவித வசதி மற்றும் பாதுகாப்பின்றி செயல்பட்டுவநத 5 பெண்கள் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாவட்டஆட்சியர் தெரிவித்து உள்ளார்.