சென்னை: காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி, மத்தியஅரசின் பதக்கத்திற்கு தேர்வு செய்யப் பட்டுள்ள 5 பெண் காவல் துறை அதிகாரிகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
2020ஆம் ஆண்டின், “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது” அறிவிக்கப் பட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் புலனாய்வில் சிறந்து விளங்கும் 121 காவல் துறை, அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர். அவர்களில் 5 பெண் அதிகாரி களும் அடங்குவர்.
தமிழக அதிகாரிகளின் விவரம்
ஜி.ஜான்சிராணி – ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி காவல் நிலைய ஆய்வாளர்.
கவிதா – புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
பொன்னம்மாள் – நீலகிரி மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்.
சந்திரகலா – அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
கலா – பெரம்பலூர், அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர்
வினோத்குமார் – சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பீட்டர் அல்போன்ஸ், காவல்துறையின் பணியில் புலனாய்வு மிக முக்கியமானது.நுண்ணறிவு,பொறுமை, விடாமுயற்சி,கடின உழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகாது.புலன்விசாரணையில் சாதித்த தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு ஆறு பேருக்கு மெடல் வழங்கியதில் 5 பேர் பெண்கள் என்பது பெருமை.சாதனை மகளிருக்கு பாராட்டு!
என தெரிவித்து உள்ளார்.