டில்லி

க்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி இறுதி சோதனை நடத்த  இந்தியாவில் இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை நிறுத்த தடுப்பூசியை கண்டறியப் பல நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.   இதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஸெனிக்கா இணைந்து கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி இரு கட்ட மனித சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.   இந்த குழுவின் இந்தியக் கூட்டாளியாக சீரம் இன்ஸ்டிடியூட்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்தின் மூன்றாம் மற்றும் இறுதிக் கட்ட மனித சோதனை இந்தியாவில் நடைபெற உள்ளது.  இந்த சோதனை வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.  இது குறித்து இந்திய பயோடெக்னாலஜி துறை செயலர் ரேணு ஸ்வரூப், “இந்தியர்களுக்கு இந்த மருந்து அளிக்கப்பட உள்ளதால் முன்கூட்டியே சோதனை நடத்த வேண்டியது உள்ளது. எனவே இந்தியாவில் இந்த மருந்தின் சோதனை நடத்துவது மிகவும் அவசியமாகும்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் பயோடெக்னாலஜி துறைக்கும் பங்கு உள்ளது.  நிதி உதவி, ஒழுங்குமுறை அனுமதி,, உள்ளிட்ட பலவற்றையும் இந்த துறை கவனித்துக் கொள்கிறது. அவ்வகையில் மூன்றாம் கட்ட மனித சோதனை நடக்கும் இடங்களைத் தேர்வு செய்துள்ளோம்.  தற்போது ஐந்து இடங்கள் இந்த சோதனைக்குத் தயாராக உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.