ராமநாதபுரம்:
லங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. அதிலும் முக்கியமாக காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்தது.

இதன் காரணமாக இலங்கையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங் களை சேர்ந்த மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. ஆகையால் வாழ வழியின்றி தவிக்கும் பலர் இலங்கையில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

முக்கியமாக இலங்கை தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். முதன்முதலாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை தமிழர்கள் 20 பேர் ராமேசுவரம் தனுஷ்கோடிக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மேலும் பலர் குடும்பம் குடும்பமாக வந்தபடி இருக்கின்றனர்.

இந்நிலையில், இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து இதுவரை 20 மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.