சென்னை:
செங்கல்பட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், மாநில அரசு பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நசரத்புரம் பகுதியில் 3 பேருக்கும், வண்டலூர் பகுதியில் ஒருவருக்கும், சிட்லப்பாக்கம் பகுதியில் ஒருவருக்கும் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயயப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே பாதிக்கப்பட்ட 86 நபர்களையும் சேர்த்து மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல குணமாகி 48 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel