சென்னை

முதல்முறையாகச் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இந்த ஆண்டு 5 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கி உள்ளது.

நேற்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில்

”சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு (2023) 5 லட்சம் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2018-ம் ஆண்டு 4 லட்சத்து 83 ஆயிரம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பாக காவல்  நிலையத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என காவல்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். 

வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் சென்னை சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் செயல்படும் பாஸ்போர்ட் மையங்களில் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். 

2023-ம் ஆண்டு 20 ஆயிரம் விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் தொடர்பான குறைகள் செல்போன், இ-மெயில், வாட்ஸ் அப், டிவிட்டர், ஸ்கைப் போன்றவற்றின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.