சென்னை: தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, பிருந்தா – எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அய்மன் ஜமால் – எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகுணாசிங் – காத்திருப்போர் பட்டியலில் இருந்து, சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கவுதம் கோயல் – பள்ளிக்கரணை காவல் துணை ஆணையராகவும், பாஸ்கரன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை மதுரை 6 வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.